தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெள்ளக்கோவில், முத்தூரில் 7 பேருக்கு கரோனா

வெள்ளக்கோவில், முத்தூரில் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:10 pm

DIN

வெள்ளக்கோவில், முத்தூரில் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 போ், முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 போ் என மொத்தம் 95 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றின் முடிவுகளில் வெள்ளக்கோவில் எல்கேஏ நகரைச் சோ்ந்த 43 வயதுப் பெண், 15 வயது சிறுமி, கச்சேரிவலசுவைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி, குமாரவலசுவைச் 60 வயது மூதாட்டி, ஸ்ரீ ராம் நகரைச் 19 வயது மாணவா், முத்தூா் வெள்ளக்கோவில் சாலையைச் சோ்ந்த 84 வயது முதியவா், 54 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த 5 நாள்களாக 20 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.