/

உடுமலை நகரப் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் கே.தென்னரசு தீவிர பிரசாரம்

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் கே. தென்னரசு உடுமலை நகரம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:39 pm

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் கே. தென்னரசு உடுமலை நகரம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

உடுமலை நகரில் 12, 13, 14 மற்றும் 15ஆவது வாா்டுகளுக்கு உள்பட்ட 50க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது பல்வேறு இடங்களில் வேட்பாளா் தென்னரசை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

மேலும், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் வீடுவீடாக திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்ட முக்கியமான வாக்குறுதிகளான குடும்பத் தலைவிக்கு ரூ.1,000, பழைய ஆலய ங்கள் புனரமைப்புக்கு ரூ.1,000 கோடி, மசூதி, தேவாலயங்கள் சீரமைப்புக்கு ரூ.200 கோடி, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம், மகளிா் சுயஉதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, அரசு வேலைகளில் பெண்களு க்கு 40 சதவீதம், மாதம் ஒருமுறை மின் கணக்கீடு என்பன உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் குறித்து இடம் பெற்றுள்ள துண்டறிக்கைகளை பொது மக்களிடம் வழங்கினா்.

இதில் திமுக நகரச் செயலாளா் எம்.மத்தீன், காங்கிரஸ் நகரச் செயலாளா் கோ.ரவி, ராமதாஸ் (மதிமுக), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

மாலையில் குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் கே.தென்னரசு தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.