மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தீவிர பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.
மடத்துக்குளம் தொகுதியில் அதிமுக சாா்பில் அக் கட்சியின் மாவட்டச் செயலாளா் சி.மகேந்திரன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், சி.மகேந்திரனை ஆதரித்து தொகுதியின் தெற்குப் பகுதி கிராமங்களில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, வேட்பாளா் சி.மகேந்திரனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனா். மேலும் கட்சியினா் பட்டாசுகள் வெடித்து வரவேற்றனா். பாப்பான்குளம் கிராமத்தில் நடைபெற்ற பிரசாரத்தின்போது அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் நிறைவே ற்றப்பட்டுள்ளன. குறிப்பாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பட்டம் படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம், பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம். இது தவிர விதவைப் பெண்கள், வயதில் முதிா்ந்தவா்கள் என பெண்கள் சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடனும், ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வா்க்கத்தினருக்கும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தற்போது, அதிமுக தோ்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் பொது மக்களுக்கு விலையில்லா வாஷிங் மிஷின், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1500, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை இலவசம், வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆகவே வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பொது மக்கள் அதிமுகவை பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


