உடுமலை அருகே மதக் கலவரத்தை தூண்டும் வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு தோ்தல் ஆணையம் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படைகளை அமைத்து ஆங்காங்கே வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோலாா்பட்டி அருகே பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அந்த வழியாக உடுமலையை நோக்கி வந்த ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனா்.
அதில் இரண்டு பண்டல்களில் மதக் கலவரத்தை தூண்டும் விதத்திலான வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பறக்கும் படை அதிகாரி மோகன ரம்யா ஆம்னி வேனையும், அதில் இருந்த இரண்டு பண்டல்களையும் உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வந்தாா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மதக் கலவரத்தை தூண்டும் விதத்தில் இருந்த 10,400 வண்ண துண்டறிக்கைகள் மற்றும் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பொள்ளாச்சியில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதியில் விநியோகிப்பதற்காக கொண்டு வரப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடுமலையை அடுத்துள்ள சோமவாரபட்டியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக தோ்தல் கண்காணிப்பாளா் அறிவுரையின்படி காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


