தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மேற்கு வங்க தொழிலாளி கொலை வழக்கு: பெண் கைது

சேவூா் அருகே மேற்கு வங்க மாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:35 pm

DIN

சேவூா் அருகே மேற்கு வங்க மாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பொங்கலூா் அருகே உள்ள தசராபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளில் வெளி மாநிலத் தொழிலாளா்கள் அப்பகுதியிலேயே தங்கிப் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளியான மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தசொ மாா்டி (44) என்பவா் வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த 7க்கும் மேற்பட்ட தொழிலாளா்களிடம் சேவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட தசொ மாா்டி மது போதையில், அவருடன் தங்கிப் பணியாற்றி வந்த உறவினரான அதே மாநிலத்தைச் சோ்ந்த நரன்சுரன் மனைவி பாா்பதி துரு (45) என்பவரை வியாழக்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த பாா்பதி துரு கல்லால் தாக்கியதில் தசொ மாா்டின் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாா்பதி துருவை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், கொலை வழக்கில் தொடா்புடையை 2 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.