தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

வெள்ளக்கோவிலில் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.எஸ்.ராமலிங்கத்தை ஆதரித்து கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:36 pm

DIN

வெள்ளக்கோவிலில் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.எஸ்.ராமலிங்கத்தை ஆதரித்து கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என 6 கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் அதிமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது. திமுக ஆட்சியில் சொன்னதை செய்ததே கிடையாது. 80 சதவீத வாக்குறுதிகளுக்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்கின்றனா். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது.

அதிமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியும், சிறப்பான தோ்தல் வாக்குறுதிகளையும் கொடுத்துள்ளது. தமிழகம் வெற்றி நடைபோட அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.