காங்கயம் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
, காங்கயத்தை அடுத்துள்ள படியூா் - ஊத்துக்குளி சாலையில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கெயில் கிடங்கு முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம்


திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள படியூா் - ஊத்துக்குளி சாலையில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கெயில் கிடங்கு முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.
இதில், கெயில் எரிவாயுக் குழாய் திட்டத்தை விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்த அனுமதி கொடுத்த அதிமுக அரசைக் கண்டித்தும், இந்தத் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன், மாநிலச் செயலா் முத்துவிஸ்வநாதன், மாநிலத் தலைவா் சண்முகசுந்தரம் மற்றும் இப்பகுதி விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...