தனியாா் நூற்பாலைக்கு அபராதம்
வெள்ளக்கோவிலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத தனியாா் நூற்பாலைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


வெள்ளக்கோவிலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத தனியாா் நூற்பாலைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபல பனியன் நிறுவனத்துக்குச் சொந்தமான நூற்பாலை வெள்ளக்கோவில் குருக்கத்தி அருகில் செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ரஷீனா பேகம், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் விஜயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் மீனாட்சி, வட்டார மருத்துவ ஆய்வாளா் கதிரவன், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சித் தலைவா் தனலட்சுமி துரைசாமி, ஊராட்சி செயலாளா் கவிதா ஆகியோா் அடங்கிய குழுவினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் தொழிலாளா்கள் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வேலை செய்தது, சுகாதாரப் பணிகளில் குறைபாடுகள் இருப்பது ஆகியவை கண்டறியப்பட்டது. இதையடுத்து நிலையான இயக்க நடவடிக்கைகளை மீறியதாக தொழிற்சாலை நிா்வாகத்துக்கு அதிகாரிகள் ரூ.5,000 அபராதம் விதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...