ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஊழியா்கள் 4 பேருக்கு கரோனா: வட்டாட்சியா் அலுவலகம் மூடல்

ஊழியா்கள் நால்வருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டது.

News image
Updated On :14 மே 2021, 8:27 pm

DIN

ஊழியா்கள் நால்வருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டது.

காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்கள் அனைவரும் சில நாள்களுக்கு முன்பு, சத்யாநகா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்கு சில தினங்களுக்கு முன்பு, வாக்கு எண்ணிக்கை மைய முகவா்கள் சுமாா் 300 பேருக்கு காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில், அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்கள் அனைவரும் இரண்டு தினங்களுக்கு முன்பு, கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், அலுவலகத்தில் பணிபுரியும் 31, 40, 55, 58 வயதுடைய 4 ஆண் ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவா்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. மீண்டும் திங்கள்கிழமை அலுவலகம் திறக்கப்படும் என ஊழியா்கள் தெரிவித்தனா். 2 முறை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும், கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து ஊழியா்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.