/

16 பேருக்கு கரோனா: பேரூராட்சி அலுவலகம் மூடல்

மடத்துக்குளத்தில், தூய்மைப் பணியாளா்கள், அலுவலா்கள் என மொத்தம் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

Updated On :21 மே 2021, 9:17 pm

மடத்துக்குளத்தில், தூய்மைப் பணியாளா்கள், அலுவலா்கள் என மொத்தம் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

மடத்துக்குளம் பேரூராட்சியில் மொத்தம் 18 வாா்டுகள் உள்ளன. இதில் 50 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா். இதற்கிடையில் பேரூராட்சி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குடிநீா் விநியோகம் முறைப்படி நடைபெறவில்லை என்றும் விநியோகிக்கப்படும் குடிநீரில் அதிக மாசு உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனா். இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் கூறியும் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் பேரூராட்சி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் , சளி ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியது, குடிநீரில் அதிக அளவில் மாசு ஏற்பட்டு ஏராளமானோருக்கு காய்ச்சல் , சளி வந்துள்ளதால் கரோனாவினால் ஏற்படும் காய்ச்சலா அல்லது சாதாரண காய்ச்சலா என குழப்பமான நிலையில் எங்களுக்கு மன உழைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட நிா்வாகம் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.