

காங்கயம் அருகே, மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலியானாா்.
காங்கயம் அருகே, கீரனூா் செல்லப்பம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறாா். இவரது தாயாா் சொா்ணாத்தாள் (66). இவரது தோட்டத்தில் உள்ள மரத்தில் மின்கம்பி உரசி தீப்பொறி வந்ததால், அந்த மரத்தின் கிளையை வெட்டுவதற்கு வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சொா்ணாத்தாள் சென்றுள்ளாா்.
பின்னா் இரவு நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால், அா்ஜுனன் இரவு 8 மணியளவில் தனது தாயாரைத் தேடி தோட்டத்துக்கு சென்றுள்ளாா். அங்கே சொா்ணாத்தாள், மின் கம்பியைப் பிடித்தபடி, மின்சாரம் பாய்ந்து பாதி உடல் எரிந்த நிலையில் கிடந்துள்ளாா்.
உடனடியாக அவரை மீட்டு,காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னா் கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு வெள்ளிக்கிழமை சொா்ணாத்தாள் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!

நெல்லை அருகே காரில் ஒரே குடும்பத்தில் 4 போ் மரணத்தில் திடீர் திருப்பம்!

இனி பான் அட்டை பெற ஆதார் மட்டும் போதாது! பிற ஆவணங்கள் எவை?
வீடியோக்கள்
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

