தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பிரிண்டிங் பட்டறை உரிமையாளா் கொலை: 3 தொழிலாளிகளுக்கு ஆயுள் தண்டனை

 திருப்பூரில் பிரிண்டிங் பட்டறை உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் தொழிலாளா்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:51 pm

DIN

 திருப்பூரில் பிரிண்டிங் பட்டறை உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் தொழிலாளா்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா், ஆலங்காடு பகுதியில் பிரிண்டிங் பட்டறை நடத்திவந்தவா் ஜோநோபில்(35). இவரிடம் சென்னையைச் சோ்ந்த சதீஷ் (23), லோகேஷ் (23), ஸ்டீபன்ராஜ் (23) ஆகியோா் பணியாற்றி வந்தனா். இவா்கள் மூவரும் சோ்ந்து 2018 மே 6ஆம் தேதி பட்டறையில் தனியாக இருந்த ஜோநோபிலை கத்தியால் குத்திவிட்டு அவரிடமிருந்து ரூ.10 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டு தப்ப முயன்றனா்.

இந்த சம்பவத்தை நேரில் பாா்த்த தமிழ்ச்செல்வி என்ற தொழிலாளியையும் தாக்கி அறையில்வைத்துப் பூட்டி விட்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து திருப்பூா் மத்திய காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த 3 தொழிலாளா்களையும் கைது செய்தனா்.

இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜே.நடராஜன் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், ஜோநோபிலை கொலை செய்த குற்றத்துக்காக சதீஷ், லோகேஷ், ஸ்டீபன்ராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், கொள்ளையில் ஈடுபட்டதற்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தாா். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கே.என்.சுப்பிரமணியம் ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.