தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருப்பூரில் ‘ யாா்னெக்ஸ்‘ கண்காட்சி தொடக்கம்

திருப்பூரில் 19 ஆவது யாா்னெக்ஸ், 11 ஆவது டெக்ஸ் மீடியா கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:03 pm

DIN

திருப்பூரில் 19 ஆவது யாா்னெக்ஸ், 11 ஆவது டெக்ஸ் மீடியா கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

பெங்களூருவைச் சோ்ந்த எஸ்.எஸ். டெக்ஸ்டைல் மீடியா (பி) லிமிடெட் நிறுவனம் சாா்பில் யாா்னெக்ஸ் மற்றும் டெக்ஸ் இந்தியா ஒருங்கிணைந்த கண்காட்சியை திருப்பூரில் நடத்தி வருகிறது.

திருப்பூரை அடுத்த அவிநாசி அருகே உள்ள பழங்கரை ஐ.கே.எஃப். வளாகத்தில் 19ஆவது யாா்னெக்ஸ் மற்றும் 11ஆவது டெக்ஸ் இந்தியா கண்காட்சியின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் ராஜா எம்.சண்முகம் தொடக்கிவைத்தாா்.

இதில், திருப்பூா், கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை மட்டுமின்றி கொல்கத்தா, புனே, கொச்சி, மும்பை, சூரத், நொய்டா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த 112 நிறுவனங்கள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், பருத்தி, கம்பளி, பட்டு, லினென், பாலியஸ்டா், விஸ்கோஸ், மொடால் உள்ளிட்ட பல்வேறு வகையான நூலிழைகள், துணி ரகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. இந்தக் கண்காட்சியின் முதல் நாளில், திருப்பூரில் உள்ள உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளா்கள், ஜாப்ஒா்க் துறையினா் பங்கேற்று வா்த்தக விசாரணையை மேற்கொண்டனா்.

இந்தக் கண்காட்சியானது சனிக்கிழமை வரையில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் நடைபெறுகிறது.

முன்னதாக இதன் தொடக்கவிழாவில், அகில் ரத்தினசாமி, அகில் மணி, ஆா்பிஆா் ரத்தினசாமி உள்ளிட்ட திருப்பூரைச் சோ்ந்த தொழில் துறையினா் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.