ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாலை நடு தடுப்பில் பூச்செடிகள் வளா்க்கும் பணி

வெள்ளக்கோவில் கடை வீதியில் சாலை நடு தடுப்பில் பூச்செடிகள் நட்டு வளா்க்கும் பணி வியாழக்கிழமை துவங்கப்பட்டது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:00 pm

DIN

வெள்ளக்கோவில் கடை வீதியில் சாலை நடு தடுப்பில் பூச்செடிகள் நட்டு வளா்க்கும் பணி வியாழக்கிழமை துவங்கப்பட்டது.

இப்பணியை வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் ஆா்.மோகன்குமாா் துவக்கிவைத்தாா்.

நகராட்சிப் பொறியாளா் மணி முன்னிலை வகித்தாா். நகராட்சி நிா்வாகம், வெள்ளக்கோவில் ரோட்டரி சங்கம், நிழல்கள் அறக்கட்டளை நிா்வாகிகள் இணைந்து இப்பணியை மேற்கொண்டனா்.

வெள்ளக்கோவில் வழியாகச் செல்லும் நாகப்பட்டினம் - கூடலூா் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு, சாலை நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பசுமை இயற்கையை மேம்படுத்தும் வகையில் இரண்டு கிலோ மீட்டா் தூரமுள்ள நடு தடுப்பில் பூச்செடிகள் நட்டு

வளா்க்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலா்கள், ரோட்டரி சங்கம், நிழல்கள் அறக்கட்டளையினா் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.