தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் திருடிய இளைஞா்: சிசிடிவி கேமராவில் பதிவு

அவிநாசியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை திருடிவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:28 pm

DIN

அவிநாசியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை திருடிவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா், வேலம்பாளையம், காவிலிபாளையம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன் மகன் வசந்த்குமாா் (39). பனியன் நிறுவன உரிமையாளா்.

இவா், அவிநாசியில் உள்ள இரு வங்கிகளில் மொத்தம் ரூ.1.80 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு கீழே உள்ள பெட்டியில் வெள்ளிக்கிழமை வைத்துள்ளாா்.

பிறகு அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடைக்கு முன் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளாா்.

சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து வசந்த்குமாா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். முதற்கட்ட விசாரணையில், கடையின் சிசிடிவி பதிவை ஆய்வு செய்ததில், வசந்த்குமாா் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை இளைஞா் ஒருவா் திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.