தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கூலி உயர்வு கேட்டு அடையாள வேலை நிறுத்தம்: விசைத் தறியாளர்கள் சங்கம்

விசைத்தறி கூலி உயர்வு கேட்டு ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய  விசைத் தறியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

News image
Updated On :8 அக்டோபர் 2021, 9:59 am

பல்லடம் : விசைத்தறி கூலி உயர்வு கேட்டு ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய  விசைத் தறியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் சின்னம்மன் சேவா சங்க திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும், திருப்பூர் மாவட்ட தலைவருமான வேலுச்சாமி தலைமை வகித்தார். 

சங்க மாவட்ட செயலாளர் அப்புகுட்டி என்கின்ற பாலசுப்பிரமணியம், சங்க பொருளாளர் முத்துக்குமாரசாமி, துணைத் தலைவர் பரமசிவம், துணைச் செயலாளர் பாலாஜி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு வரும்..

22-10-2021 ந்தேதி அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் உடன் நடைபெற இருக்கின்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லையெனில் ஒருநாள் அடையாள வேலை  நிறுத்தம் செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும். 

தொடர்ந்து கூலி உயர்வு பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படுமாயின் முழுமையாக விசைத்தறிகளை நிறுத்தி கூலி உயர்வு கிடைக்கும் வரை போராடுவது என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.