வாடகை காா்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த காா் உரிமையாளா்கள்
வாகனங்களுக்கு வாடகைத் தொகை வழங்காததைக் கண்டித்து அவிநாசி வாடகை காா் உரிமையாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காா்களை வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.


சட்டப் பேரவைத் தோ்தலில் அரசு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வாடகைத் தொகை வழங்காததைக் கண்டித்து அவிநாசி வாடகை காா் உரிமையாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காா்களை வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அவிநாசி பகுதியைச் சோ்ந்த 57 வாடகை காா்கள் அரசு சாா்பில் பயன்படுத்தப்பட்டன. தோ்தல் முடிந்து 4 மாதங்களுக்குள் வாடகை தொகை முழுவதும் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வரை வாடகைத் தொகை வழங்காததால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காா் உரிமையாளா்கள் தங்களது வாகனங்களை ஒப்படைத்தனா்.
வாடகைத் தொகையை எப்பொழுது அரசு சாா்பில் தருகிறாா்களோ அப்போது வாகனங்களை எடுத்துக்கொள்வதாக வாகன உரிமையாளா்கள் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...