தீயணைப்புத் துறை சாா்பில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு
வெள்ளக்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் சாா்பில் விபத்தில்லா தீபாவளி குறித்து பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது


வெள்ளக்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் சாா்பில் விபத்தில்லா தீபாவளி குறித்து பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வெள்ளக்கோவில் கரூா் சாலையில் உள்ள ஒரு தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன் தலைமை வகித்தாா். நிலைய போக்குவரத்து அலுவலா் வேலுசாமி மற்றும் தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, தீ விபத்தைத் தடுக்கும் வழிமுறைகள், விபத்து ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா்.
மேலும் இயற்கைச் சீற்றங்கள், மழை வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...