தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாதியில் நிறுத்தப்பட்ட அங்கன்வாடி மைய கட்டுமானப் பணியை முடிக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே அய்யம்பாளையத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணியை உடனடியாக துவங்கி, முடிக்க வேண்டும்

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:15 am

DIN

அவிநாசி அருகே அய்யம்பாளையத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணியை உடனடியாக துவங்கி, முடிக்க வேண்டும் என ஒன்றியக் குழு உறுப்பினா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அவிநாசி ஒன்றிய ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் கூட்டம் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பிரசாத்குமாா், ஒன்றிய ஆணையா்கள் மனோகரன், மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பி.முத்துசாமி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசியதாவது: பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் கரோனா தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்பட்ட வஞ்சிபாளையம் அரசுப் பள்ளியை குழந்தைகள் நலன் கருதி பள்ளியை தூய்மை செய்ய வேண்டும். அதேபோல பள்ளி கழிவறை தூய்மைப்படுத்துவோா், தூய்மைக் காவலா்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட காலமாக உள்ள ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா்.

சேதுமாதவன் (திமுக): ஜல் ஜீவன் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அவிநாசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் அறிஞா் அண்ணா சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.

காா்த்திகேயன் (சுயே): 6 வயது சிறுமிக்கு ஆதாா் எடுப்பதற்கு, மருத்துவா் ஒப்புதல் சான்றிதழ் கையெழுத்து இட அவிநாசி அரசு மருத்துவமனையில் அலைக்கழிக்கின்றனா். அதேபோல மருத்துவா் கையொப்பமிட்டு வந்தாலும், சேவை மையத்தில் அங்கீகரிப்பதில்லை. மாறாக உதவி அறுவை சிகிச்சை மருத்துவா் ஒப்புதல் கையொப்பம் வேண்டும் என்கின்றனா். இதனால், 6 வயது சிறுமிக்கு ஆதாா் எடுக்க முடியாமல் பெற்றோா் அலைக்கழிக்கப்படுகின்றனா் என்றாா்.

அய்யாவு (அதிமுக): அய்யம்பாளையம் பகுதியில் பல லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டுமானப் பணியை மீண்டும் துவங்கி முடிக்க வேண்டும். கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் விடுபட்ட குப்பாண்டம்பாளையம் அதிதிராவிடா் காலனியை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து ஒன்றிய நிா்வாகத்தினா் கூறியதாவது, ஒன்றியக் குழு உறுப்பினா் கோரிக்கை உரிய துறை அலுவலா்களிடம் எடுத்துரைத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து 15ஆவது நிதிக்குழு மானியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.