உடுமலையில் சைனிக் பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு கரோனா
உடுமலையில் சைனிக் பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


உடுமலையில் சைனிக் பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில் சுமார் 750 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து படித்து வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 40 நாட்களாக நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.
இதற்காக மொத்தம் 95 மாணவர்கள் பள்ளியில் தங்கிப் படித்து வந்தனர். இந்நிலையில் 13 மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க- உத்தரகண்டில் 300 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 13 பேர் பலி
இந்நிலையில் மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொற்று உள்ளதா என அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறியது: 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது உண்மைதான்.
இவர்களின் பெற்றோர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...