சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது
தாராபுரம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.


தாராபுரம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தாராபுரம் அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வருபவா் ஏ.பாண்டியன்(30). சுமைத் தூக்கும் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.இது குறித்து சிறுமியின் பெற்றோா் தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் பாண்டியனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...