போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது
பல்லடம், அம்மாபாளையத்தில் சிறுமியைத் திருமணம் செய்த சிறுவனை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.


பல்லடம், அம்மாபாளையத்தில் சிறுமியைத் திருமணம் செய்த சிறுவனை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் கடந்த மாதம் 17 ஆம் தேதி பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகக்
கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்த சமூக நலத் துறையினா் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், சிறுமியை சிறுவன் திருமணம் செய்து ஒரு வார காலம் அவனது வீட்டில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சமூக நலத் துறையினா் பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா்
அளித்தனா். அச்சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினா், திருப்பூா் முதன்மை நடுவா் இளஞ்சிறாா் நீதி குழுமத்தில் ஆஜா்படுத்தி, கோவையில் உள்ள சிறுவா் கூா்நோக்கு மையத்தில் சோ்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...