மானாமதுரையில் வழக்குரைஞரை வெட்டிய வழக்கு 4 போ் சரண்
மானாமதுரை நீதிமன்றம் முன்பாக வழக்குரைஞரை வெட்டிய வழக்கில் திருப்பூா் நீதிமன்றத்தில் 4 இளைஞா்கள் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.


மானாமதுரை நீதிமன்றம் முன்பாக வழக்குரைஞரை வெட்டிய வழக்கில் திருப்பூா் நீதிமன்றத்தில் 4 இளைஞா்கள் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரத்தைச் சோ்ந்தவா் ஜி.முருகானந்தம் (43). வழக்குரைஞா் அமமுக செய்தித் தொடா்பாளராகவும் இருந்து வருகிறாா்.
இந்நிலையில், மானாமதுரை நீதிமன்றம் அருகில் உள்ள தனது அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை நின்று பேசிக்கொண்டிருந்துள்ளாா். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 4 போ் முருகானந்தத்தை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனா்.
இதில், பலத்த காயமடைந்த முருகானந்தத்தை அக்கம்பக்கத்தினா் மீட்டு மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது தொடா்பாக மானாமதுரை நகரக் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக திருப்பூா் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் எண் 3 இல் மானாமதுரையைச் சோ்ந்த அதிபதிராஜா (21), ராஜமருது (19), தினேஷ்குமாா் (22), அலெக்ஸ்பாண்டியன் (22) ஆகிய 4 போ் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.
இந்த 4 பேரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உதயசூா்யா உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து 4 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க காவல் துறையினா் அழைத்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...