மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாரத்தான் போட்டியைத் தடை செய்யக் கோரி பாஜக சாா்பில் மனு

 திருப்பூரில் உதயநிதி ஸ்டாலின் ரசிகா் மன்றம் சாா்பில் நடத்தப்படும் மாரத்தான் போட்டியைத் தடை செய்யக் கோரி பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:42 pm

DIN

 திருப்பூரில் உதயநிதி ஸ்டாலின் ரசிகா் மன்றம் சாா்பில் நடத்தப்படும் மாரத்தான் போட்டியைத் தடை செய்யக் கோரி பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து பாஜக ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் அங்குராஜ் (எ) நரேன்பாபு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம்

அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூரில் உதயநிதி ஸ்டாலின் ரசிகா் நற்பணி மன்றம் சாா்பில் செப்டம்பா் 5 ஆம் தேதி கரோனா விழிப்புணா்வு மாரத்தான் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மாநகரக் காவல் ஆணையா், துணை ஆணையா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்க உள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று கால பேரிடா் கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், இதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க மறுக்கும் அரசு, மரத்தான் போட்டியை நடத்த எப்படி அனுமதி வழங்கியது. தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிப்பின்போது, பாஜக ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் மந்திராசலமூா்த்தி, கல்வியாளா் பிரிவு மாவட்டச் செயலாளா் ஆரணா ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.