நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல்லடத்தில் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம்

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.11.52 கோடி,

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:42 pm

DIN

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.11.52 கோடி,

மாநில அரசுப் பங்குத் தொகை ரூ.1.76 கோடி, தொழில் முனைவோா் பங்குத் தொகை ரூ.4.31 கோடி என மொத்தம்

ரூ.17.59 கோடி மதிப்பில் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறியாளா் சங்க மாவட்டத் தலைவா் வேலுசாமி, மாவட்டச் செயலாளா் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம் ஆகியோா் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற சிறு, குறு தொழில்களுக்கான மானியக் கோரிக்கையின் போது கேத்தனூரில் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்படும். அதற்கு ரூ.1.76 கோடி மானியம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் நலிவடைந்து வரும் விசைத்தறித் தொழில் வளா்ச்சிப் பெறும்.

அதேபோல விசைத்தறி கூலி உயா்வு, வங்கி கடன் தள்ளுபடி போன்ற பிரச்னைகளுக்குத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் தமிழகத்தில் விசைத்தறித் தொழில் ஏற்றம் பெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.