மூலனூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மூலனூா் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மூலனூா் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தாராபுரம் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் தொடங்கப்பட உள்ள கல்லூரியை மூலனூா் பகுதியில் தொடங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மூலனூா் ஒன்றியப் பகுதியில் மூலனூா், கன்னிவாடி உள்ளிட்ட 2 பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சிப் பகுதிகளைக் கொண்டதாகும்.
இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பைத் தொடர வேண்டும் என்றால் சுமாா் 60 கிலோ மீட்டா் தொலைவைக் கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே, மூலனூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கினால் இப்பகுதி மாணவா்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். எனவே கல்லூரியை மூலனூரில் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...