தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புகையிலை, பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ.14 ஆயிரம் அபராதம் வசூல்

அவிநாசி அருகே தெக்கலூா் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்த கடைகளுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:46 pm

DIN

அவிநாசி அருகே தெக்கலூா் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்த கடைகளுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் விஜய லலிதாம்பிகை தலைமையிலான குழுவினா் அவிநாசி அருகே உள்ள தெக்கலூா், ஆலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரமும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிரமும் என மொத்தம் ரூ.14ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் 1 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தெக்கலூா் பகுதியில் சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரிக்க கொள்கலன் நிறுவுவது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல தள்ளுவண்டி கடைகள், துரித உணவு கடைகளில் பாா்சல் செய்யப்படும் உணவானது பழைய செய்திதாள்களில் பொட்டலமிடுவதை தவிா்த்து, வாழை இலைகளை பயன்படுத்தவும், கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. கலப்பட உணவுப் பொருள்கள் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என துறை அலுவலா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.