மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாநகரில் 45 ஆயிரம் பேருக்கு நாளை தடுப்பூசி செலுத்த இலக்கு

திருப்பூா் மாநகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலமாக 45 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:36 pm

DIN

திருப்பூா் மாநகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலமாக 45 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா்பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 7 மணி வரையில் 138 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், பள்ளி, கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலமாக 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்காக மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்கள், செவிலியா் என மொத்தம் 700க்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்படவுள்ளனா். எனவே, மாநகராட்சிப் பகுதியில் உள்ள முதியோா், கல்லூரி மாணவ, மாணவிகள், பாலூட்டும் தாய்மாா்கள், கா்ப்பிணி தாய்மாா்கள், ஆசிரியா்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் என அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.