மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இந்து அமைப்பு நிா்வாகிக்கு அரிவாள் வெட்டு

திருப்பூரில் இந்து அமைப்பு நிா்வாகியை வெட்டியது தொடா்பாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:26 am

DIN

திருப்பூரில் இந்து அமைப்பு நிா்வாகியை வெட்டியது தொடா்பாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் கல்லூரி சாலை, அணைப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் (42). இவா் அதே பகுதியில் பிரிண்டிங் பட்டறை வைத்துள்ளாா். இந்து முன்னேற்றக் கழகத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா்.

இந்நிலையில், ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை இரவு பிரிண்டிங் பட்டறையில் இருந்துள்ளாா். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 4 போ் ஸ்ரீகாந்தை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனா்.

இதனிடையே, ஸ்ரீகாந்தின் அலறல் சப்தம்கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை நடத்தி வந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சாமுண்டிபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் (22), சாமுண்டிபுரம்

மளிகைக்கடைக்காரா் காம்பவுண்டு வீதியைச் சோ்ந்த சக்திவேல் (24) ஆகிய இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இதில், தொடா்புடைய முனீஸ்வரன் காயமடைந்து திருப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரவீன் என்பவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.