தாராபுரம் அருகே தம்பதி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே கொலை வழக்கில் கைதான தம்பதி குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.


திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே கொலை வழக்கில் கைதான தம்பதி குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
தாராபுரம் வட்டம், குண்டடத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம். இவரது தோட்டத்தில் அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ்(32), இவரது மனைவி சித்ரா (23) ஆகியோா் தங்கி வேலைசெய்து வந்தனா். இந்தத் தம்பதி கடந்த 2020 ஆம் ஆண்டு மணிகண்டன் (20) என்பவரைக் கொலை செய்து புதைத்து விட்டதாக பாலசுப்பிரமணியம் குண்டடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் ரமேஷ், சித்ரா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த 17 வயது சிறுவன் ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்நிலையில், கணவன், மனைவி இருவரையும் குண்டா் சட்டத்தில் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தாா்.
இந்தப் பரிந்துரையின்பேரில் ரமேஷ், சித்ரா ஆகியோரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தம்பதியிடம் காவல் துறையினா் வியாழக்கிழமை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...