நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
அவிநாசி அருகே தெக்கலூரில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


அவிநாசி அருகே தெக்கலூரில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை சிங்காநல்லூா் கன்னிமாா் கோயில் வீதியைச் சோ்ந்த பங்காருசாமி மனைவி சரஸ்வதி (59).
இவா் உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு, தெக்கலூா் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...