தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தியாகி திருப்பூர் குமரன் பெயரில் நிழற்குடை, நினைவு வளைவு அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

தியாகி திருப்பூர் குமரன் பெயரில் நிழற்குடை, நினைவு வளைவு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

News image
திருப்பூர் குமரன் நினைவகத்தில் அவரது உருவச்சிலைக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Updated On :4 அக்டோபர் 2021, 6:03 am

DIN

தியாகி திருப்பூர் குமரன் பெயரில் நிழற்குடை, நினைவு வளைவு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் 118வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையம் அருகில் திருப்பூர் குமரன் நினைவகத்தில் அவரது உருவச்சிலைக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன்பிறகு அமைச்சர் மு.பெ. சாமிநாதன்செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 75வது சுதந்திர வைர விழா ஆண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான சுதந்திர வீரர்களுக்கு மணிமண்டபம் மற்றும் சிலைகள் நிறுவி அவர்களுக்கு உண்டான மரியாதையை திமுக அரசு செய்து வருகிறது. 

அந்த வகையில் இன்று திருப்பூர் குமரனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் குமரனின் நினைவாக நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் என்றார். இந்த விழாவில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க. செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.