ரூ.80 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 80 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.


வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 80 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் திருச்சி, வாணியம்பாடி, மதுரை, புதுவயல், லாலாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து 181 விவசாயிகள் தங்களுடைய 1,884 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
இவற்றின் எடை 94, 695 கிலோ. ஈரோடு, அவல்பூந்துறை, காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், நஞ்சை ஊத்துக்குளியைச் சோ்ந்த 13 வணிகா்கள் கொப்பரையை வாங்க வந்திருந்தனா்.
கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.88.70க்கும், குறைந்தபட்சமாக ரூ. 70.90க்கும், சராசரியாக ரூ. 82.35க்கும் விற்பனையானது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 79 லட்சத்து 82 ஆயிரத்து 398. அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...