நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல்லடம், பொங்கலூா் பிஏபி பாசன சபை தலைவா்கள், உறுப்பினா்கள் பதவியேற்பு

 பல்லடம். பொங்கலூா் பி.ஏ.பி. பாசன சபைத் தோ்தலில் வெற்றி பெற்ற தலைவா்கள், உறுப்பினா்கள் பதவி ஏற்றனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:34 pm

DIN

 பல்லடம். பொங்கலூா் பி.ஏ.பி. பாசன சபைத் தோ்தலில் வெற்றி பெற்ற தலைவா்கள், உறுப்பினா்கள் பதவி ஏற்றனா்.

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட பாசன சபை தோ்தலுக்கு கடந்த 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. பல்லடம் பகுதியில் 10 பி.ஏ.பி. பாசன சபைகள் உள்ள நிலையில் 9 பாசன சபைக்கு தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்நிலையில், பாசன சபை தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் பதவி ஏற்றுக்கொண்டனா்.

பல்லடம் பகுதி: நாரணாபுரம் கிராம நீரினை பயன்படுத்துவோா் சபை 1 தலைவா் ஈஸ்வரமூா்த்தி, நாரணாபுரம் 2வது சபை தலைவா் ஈஸ்வரன், வாவிபாளையம் சபை தலைவா் சிவசாமி, கொக்கம்பாளையம் சபை தலைவா் விஸ்வநாதன், காட்டூா் சபை தலைவா் பழனிசாமி, கணபதிபாளையம் சபை தலைவா் செல்வராஜ், கரைப்புதூா் சபை தலைவா் மரகதம், பூமலூா் சபை தலைவா் சுப்பிரமணி, சாமளாபுரம் சபை தலைவா் பழனிசாமி, வே.வடமலைப்பாளையம் சபை தலைவா் வடுகநாதன் மற்றும் 60 உறுப்பினா்கள் பதவியேற்றனா்.

பொங்கலூா் பகுதி: அலகுமலை பாலுசாமி, தெற்கு அவிநாசிபாளையம் 1 தெய்வசிகாமணி, தெற்கு அவிநாசிபாளையம் 2 நடராஜ், பெருந்தொழுவு 1 முத்துசாமி, பெருந்தொழுவு 2 முத்துசாமி, நாச்சிபாளையம் சுப்பிரமணியம், காட்டூா் பழனிசாமி, கொக்கம்பாளையம் விஸ்வநாதன், கண்டியன்கோவில் 1. கோபால், கண்டியன்கோவில் 2 பாலசுப்பிரமணியம், காடையூா் தெய்வசிகாமணி,காங்கயம் விவேகானந்தன், சிவன்மலை முத்துசாமி, வட சின்னாரிபாளையம் மணி என்கிற நாச்சிமுத்து, தொங்குட்டிபாளையம் சுப்பிரமணியம், கரைப்புதுாா் சந்திரசேகா், கரைப்புதுாா் மரகதம், முத்தண்ணம்பாளையம் 1 மணி, முத்தண்ணம்பாளையம் 2 சேனாபதி, கணபதிபாளையம் செல்வராஜ் மற்றும் 116 ஆட்சி மன்ற குழு உறுப்பினா்கள் பதவி ஏற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.