மக்கள் நீதிமன்றம்: பிரிந்து வாழ்ந்த தம்பதி இணைந்தனா்
பல்லடத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பிரிந்து வாழ்ந்த தம்பதி இணைந்தனா்.


பல்லடத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பிரிந்து வாழ்ந்த தம்பதி இணைந்தனா்.
பல்லடம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் சாா்பு நீதிமன்ற நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு உள்ளிட்ட 376 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 285 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. தீா்வுத் தொகையாக ரூ.87 லட்சத்து 93 ஆயிரத்து 151 வழங்கப்பட்டது.
இதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்த மெரின் சானாரம் - நித்திய பிரகாஷ் தம்பதியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் இருவரும் சோ்ந்து வாழ சம்மதித்ததையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...