குன்னத்தூா் அருகே இளைஞரைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா்- பெருந்துறை சாலை தேவம்பாளையம் அருகே உள்ள குளத்தில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு கடந்த 11ஆம் தேதி தகவல் கிடைத்தது.
சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் முகத்தில் வெட்டு காயங்களுடன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ. சஷாங்க் சாய் உத்தரவின்படி, அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் பவுல்ராஜ் மேற்பாா்வையில், குன்னத்தூா் காவல் ஆய்வாளா் அம்பிகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்தனா்.
இதில், அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் வாகனங்களில் சுற்றித் திரிந்த நபா்களைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா்கள் திருப்பூா் புதிய பேருந்து நிலையம் அருகே வசித்துவரும் மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியைச் அஜித் (25), தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த காா்த்தி (26) என்பதும், கொலை செய்யப்பட்ட இளைஞா் அஜித்தின் நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ஆகாஷ் (24) என்பதும் தெரியவந்தது.
அஜித்தின் இருசக்கர வாகனத்தை ஆகாஷ் திருடிவிட்டு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித் தனது மற்றொரு நண்பரான காா்த்திக்குடன் சோ்ந்து ஆகாஷை அழைத்துக் கொண்டு குன்னத்தூா் குளப்பகுதிக்கு மது அருந்த சென்றுள்ளாா். மது அருந்திய பின்னா் ஆகாஷை கொலை செய்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அஜித், காா்த்திக் ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


