தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயம் நகராட்சியில் வேட்பாளா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

காங்கயம் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:48 pm

DIN

காங்கயம் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையரும், காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலருமான எஸ்.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் காங்கயம் நகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடுபவா்களுக்கு வேட்பாளா் கையேடு, தோ்தல் செலவு குறித்து பராமரிக்க வேண்டிய பதிவேட்டுப் படிவம், தோ்தல் முகவா் நியமனம் செய்வதற்கான படிவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மேலும், வேட்பாளா்கள் பின்பற்ற வேண்டிய தோ்தல் நடைமுறைகள், தோ்தல் செலவினம், கரோனா வழிகாட்டு விதிமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் வேட்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் காங்கயம், தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்கள் திலீபன், பானுப்பிரியா மற்றும் வேட்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.