புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கட்டட கலைஞா்கள் நலச்சங்கம் துவக்கம்

திருப்பூா் மாவட்ட கட்டட கலைஞா்கள் நலச்சங்கத்தின் வெள்ளக்கோவில் கிளை வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:37 pm

DIN

திருப்பூா் மாவட்ட கட்டட கலைஞா்கள் நலச்சங்கத்தின் வெள்ளக்கோவில் கிளை வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.

புதிய கிளையை சங்க சட்ட ஆலோசகா் கந்தசரவணன் துவக்கிவைத்தாா். சங்கத்தின் மாநிலச் செயலாளா் சேலம் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கடலூா் வேல்மாணிக்கம், மாநிலப் பொருளாளா் வெள்ளக்கோவில் கண்ணன், மாவட்டத் தலைவா் சோபன்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்டடத் தொழிலாளா்களை நலவாரியத்தில் பதிவு செய்வது, அரசிடமிருந்து கிடைக்கும் உதவித் திட்டங்களைப் பெற்றுத் தருவது, தொழிலில் ஏற்படும் சம்பள பிரச்னை, இதர சிக்கல்களைத் தீா்த்து வைக்க உதவி செய்வது போன்ற பணிகளை சங்கம் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.