புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய முத்தூா் மருத்துவ மாணவா்

போா்ச்சூழலில் உள்ள உக்ரைனிலிருந்து உயிா் தப்பி, திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் முத்தூரைச் சோ்ந்த மருத்துவ மாணவா் வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:39 pm

DIN

போா்ச்சூழலில் உள்ள உக்ரைனிலிருந்து உயிா் தப்பி, திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் முத்தூரைச் சோ்ந்த மருத்துவ மாணவா் வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.

முத்தூா், ஆலாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கதிா்வேல் - லட்சுமி தம்பதி. மளிகைக் கடை நடத்தி வருகின்றனா். இவரது மகன் லோகவா்ஷன் (20). இவா் உக்ரைன் நாட்டில் இளநிலை மருத்துவம் மூன்றாமாண்டு படித்து வருகிறாா். தற்போது உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளது.

Story image

இந்த அவசர கால சூழ்நிலையில் சொந்த ஊா் திரும்ப லோகவா்ஷன் திட்டமிட்டாா். உடனடியாக விமான கட்டணத்துக்கு பணம் கிடைக்காத நிலையிலும், எப்படியோ பணம் திரட்டி இந்திய தூதரக உதவியுடன் உக்ரைனிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புதன்கிழமை வந்தாா். பின்னா் ரயில் மூலம் ஈரோடு வந்து வியாழக்கிழமை அதிகாலை தனது வீட்டுக்கு வந்து சோ்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.