தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் ரூ. 13 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ. 13 லட்சம் ரொக்கம், 65 கிராம் தங்கம், 28 கிராம் வெள்ளிப் பொருள்கள் வசூலானது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:39 pm

DIN

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ. 13 லட்சம் ரொக்கம், 65 கிராம் தங்கம், 28 கிராம் வெள்ளிப் பொருள்கள் வசூலானது.

இக்கோயிலின் உண்டியல் 2021 செப்டம்பா் மாதத்துக்குப் பிறகு வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை திருப்பூா் உதவி ஆணையா் செல்வராஜ், காங்கயம் ஆய்வாளா் அபிநயா மற்றும் கோயில் குலத்தவா்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், ரூ. 12 லட்சத்து 86 ஆயிரத்து 880 ரொக்கம், 65 கிராம் தங்கம், 28 கிராம் வெள்ளிப் பொருள்கள் இருந்தன.

இப்பணியின் போது வீரக்குமார சுவாமி கோயில் செயல் அலுவலா் ராமநாதன், கோயில் கணக்கா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

அதிகாரிகள் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.