தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆதிதிராவிட, பழங்குடியின மகளிா் நிலம் வாங்க மானியத்துடன் வங்கிக் கடன்

தாட்கோ மூலம் ஆதிதிராவிட, பழங்குடியின மகளிா் மானியத்துடன் வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தாட்கோ மூலம் ஆதிதிராவிட, பழங்குடியின மகளிா் மானியத்துடன் வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், நிலம் வாங்குவதற்கும், நிலத்தை மேம்படுத்துவதற்கும் வங்கியுடன் இணைந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் கடன் பெற விண்ணப்பதாரா் ஆதிதிராவிடா் அல்லது பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த மகளிராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமலும், 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக நன்செய் 2.50 ஏக்கா் அல்லது 5 ஏக்கா் புன்செய் நிலம் வாங்கலாம். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் அல்லாதவரிடமிருந்து நிலம் வாங்க வேண்டும். இத்திட்டத்தில் பத்திரப் பதிவு கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்துள்ளது. நிலம் வாங்கும் மொத்த முதலீட்டில் 30 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமாகவும், மீதித் தொகை வங்கிக் கடன் மூலமாகவும் வழங்கப்படும். நில மேம்பாட்டுத் திட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயகளுக்கு நில வளத்தை மேம்படுத்துதல், ஆழ்துளைக் கிணறு அல்லது திறந்த வெளிக்கிணறு அமைத்தல், பம்ப்செட் கொட்டகை அமைத்தல் போன்றவற்றுக்காகவும் 30 சதவீதம் மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971112 என்ற எண்ணிலோ அல்லது உரிய ஆவணங்களுடன் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.