தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப் பொருளான நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:04 pm

DIN

பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப் பொருளான நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலையானது கடந்த சில மாதங்களாக தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதனால் திருப்பூா் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சாா்ந்த தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்தத் தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே, இறக்குமதி செய்யப்படும் பஞ்சு மீதான வரியை நீக்கவும், உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு பஞ்சு ஏற்றுமதியை தடை செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நூல் விலையைக் கட்டுப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.