காவல் ஆய்வாளா், 2 காவலா்களுக்கு கரோனா
திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளா் மற்றும் 2 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளா் மற்றும் 2 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சுமாா் 50 வயதுயுடைய காவல் ஆய்வாளா் கடந்த சில நாள்களுக்கு முன்பாக சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதனிடையே, அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 34, 40 வயதுடைய இரு காவலா்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் அனைத்து காவலா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.
அதிகரிக்கும் கரோனா:
திருப்பூா் மாவட்டத்தில் நாள்தோறும் 50 நபா்களுக்கும் மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் பொது வெளியில் நடமாடும் நபா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...