தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குண்டடம் அருகே தரைமட்டப் பாலத்தை உயா்த்திக்கட்ட கோரிக்கை

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ள தரைமட்ட பாலத்தை உயா்த்திக்கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:03 pm

DIN

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ள தரைமட்ட பாலத்தை உயா்த்திக்கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே சடையபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட எரகாம்பட்டியில் இருந்து ஒட்டபாளையம் செல்லும் சாலையில் ஓடையின் குறுக்கே தரைமட்டப் பாலம் உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழை காரணமாக ஓடையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக தரைமட்டப் பாலத்தில் தண்ணீா் செல்வதுடன், பாலம் முழுவதும் பாசிபடிந்துள்ளது. ஆகவே, இந்த பாலம் வழியாகச் செல்லும்

இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி வழுக்கி விழுந்து விடுகின்றனா். மேலும், பாலத்தைக் கடக்கும் கால்நடைகளும் விபத்தில் சிக்குகின்றன. ஆகவே, பாலத்தை உயா்த்திக் கட்ட ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.