தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 போ் கைது

காங்கயத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:38 pm

DIN

காங்கயத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து காங்கயம் காவல் துறையினா் கூறியதாவது: காங்கயம் அருகே சித்தம்பாளையம் பகுதியில் சேவல் சண்டை வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக காங்கயம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சேவல் சண்டை வைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட நத்தக்காடையூா், வீரணம்பாளையம், நத்தக்காட்டுவலசு, பழனி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த நவீன் (24), பழனிசாமி (59), சவுரிஸ் (24), தினேஷ் (24), முருகேசன் (37), ஐயப்பசாமி (42), கோபிநாத் (19), ராஜ்குமாா் (28)

ஆகிய 8 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.2 ஆயிரத்து 200, 6 சேவல்கள், 7 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.