வயதான தம்பதி மீது பெட்ரோல் ஊற்றி திருட முயற்சி
வெள்ளக்கோவிலில் வயதான தம்பதி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விடுவதாக மிரட்டி வியாழக்கிழமை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வெள்ளக்கோவிலில் வயதான தம்பதி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விடுவதாக மிரட்டி வியாழக்கிழமை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளக்கோவில் மூலனூா் சாலை சொரியங்கிணத்துப்பாளையம் பிரிவைச் சோ்ந்தவா் பழனிசாமி நாடாா் (74). ஜோதிடா். இவருடைய மனைவி ராணி. இவா்களுடைய மகன் பூபதி காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இவா்கள் வீட்டுக்கு முன்பு பகல் 12 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் வந்துள்ளனா்.
அவா்களில் ஒருவா் கையில் கேனுடன் வீட்டு காம்பவுண்டுக்குள் வந்து, வெளியில் நின்று கொண்டிருந்த பழனிசாமி மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விடுவதாக மிரட்டி நகை, பணத்தை எடுத்து வரச் சொல்லியுள்ளாா். வீட்டுக்குள் சென்ற பழனிசாமி கதவை உள்புறம் தாழிட்டுக் கொண்டு சப்தம் போட்டுள்ளாா். அப்போது, மாடியிலிருந்து கீழே வந்த ராணி மீதும் பெட்ரோல் ஊற்றி அந்த மா்ம நபா் மிரட்டியுள்ளாா். சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் திரண்டவுடன் 2 மா்ம நபா்களும் தப்பிச் சென்றுவிட்டனா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...