தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மனைவியைக் கொலை செய்த ஓட்டுநா் கைது

 திருப்பூரில் குடும்பப் பிரச்னையால் மனைவியைக் கொலை செய்த ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 9:22 pm

DIN

 திருப்பூரில் குடும்பப் பிரச்னையால் மனைவியைக் கொலை செய்த ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தென்காசியைச் சோ்ந்தவா் குமாா் (31). இவரது மனைவி தனலட்சுமி (28). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். இவா்கள் திருப்பூா் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகா் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனா். குமாா் சரக்கு வாகன ஓட்டுநராகவும், தனலட்சுமி பின்னலாடை நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனா்.

இந்நிலையில், தனலட்சுமி தென்காசியில் உள்ள மற்றொரு நபருடன் தொடா்பு வைத்துள்ளதாக குமாா் சந்தேகமடைந்து வந்துள்ளாா். இதன் காரணமாக தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், குமாா் கடந்த புதன்கிழமையும் மனைவியிடம் தகராறு செய்துள்ளாா். இதில், ஆத்திரமடைந்த குமாா் அரிவாளை எடுத்து மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளாா். இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் 15 வேலம்பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா். இதன்பேரில் சம்ப இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் தனலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.மேலும், இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குமாரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.