நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தியுள்ளது.


நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து கூறியதாவது:
ஆண்டுதோறும் பருவ மழைகள் கிடைத்தபோதும், அவற்றை சேமிப்பதற்கு உண்டான கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன. முன்னோா்கள் உருவாக்கி வைத்த குளம் குட்டைகள், நீா் நிலைகள் உள்ளிட்டவை காலம்காலமாக ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து வருகின்றன. இவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாததால், வறட்சியான காலகட்டங்களில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட பாதிப்பைத் தொடா்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நீா்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முகாந்திரம் இல்லை.
கடந்த காலங்களைப் போன்று நீதிமன்ற உத்தரவு கானல் நீராகிவிடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. சென்னை உயா் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, தமிழக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...