விருதுபெற்ற காவல் ஆய்வாளருக்கு வரவேற்பு
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்ற திருப்பூா் தெற்கு காவல் ஆய்வாளருக்கு சக காவலா்கள் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.


தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்ற திருப்பூா் தெற்கு காவல் ஆய்வாளருக்கு சக காவலா்கள் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.
தமிழக அரசு சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் 3 காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டு கோப்பைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2021 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையங்களில் திருப்பூா் தெற்கு காவல் நிலையம் முதலிடத்தைப் பிடித்தது. இதைத் தொடா்ந்து, சென்னையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஆய்வாளா் பி.பிச்சையாவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோப்பையை வழங்கினாா். இதையடுத்து, திருப்பூா் தெற்கு காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த காவல் ஆய்வாளா் பி.பிச்சையாவுக்கு சக காவலா்கள் பொன்னாடை அணிவித்தும், காவல் மரியாதை செலுத்தியும் உற்சாகமாக வரவேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...