மூலனூரில் ரூ. 82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.


வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 250 விவசாயிகள் தங்களுடைய 2,428 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 835 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 14 வணிகா்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனா். குவிண்டால் ரூ. 8,150 முதல் ரூ. 10,866 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 9,850. மொத்தம் ரூ. 82.24 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.
ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...